சூரிய மண்டலத்தில் விண்கற்கள் சுற்றி வருவதோடு, இந்த விண்கற்கள் பூமியின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழையும். இது வளிமண்டலத்திலேயே அழிந்து போகின்றது. இந்நிலையில் நேற்று ஒரு விண்கல் புவி வட்டப்பாதைக்குள் நுழைந்தது என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர். இது 70 சென்டிமீட்டர் விட்டம் கொண்டது. அதோடு நள்ளிரவில் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று இரவு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. இதையடுத்து 12 மணி நேரத்துக்கு பிறகு, அந்த விண்கல் ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் விழுந்து உள்ளது.

பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் அந்த விண்கல் பல துண்டுகளாக சிதைந்தது. அதன் பின் அங்குள்ள வனப்பகுதியில் தீப்பிழம்பாக சிதறி விழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக விண்கல் அளவு மற்றும் அது விழுந்த இட த்தின் எந்த ஒரு செய்தமும் ஏற்படவில்லை. இந்த விண்கல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஒரு தீப்பந்து போல காட்சியளித்துவிட்டு போய்விடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.