மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலயமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணிக்கு விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது மூன்று வாலிபர்கள் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் திடீரென அரசு பேருந்தை வழிமறித்து ஆலயமணி மற்றும் கண்டக்டர் பெரியசாமி ஆகியோரை திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் பணி செய்யவிடாமல் வாலிபர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை கற்களால் உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவர், கண்டக்டரை தாக்கி அரசு பேருந்து சேதப்படுத்திய அப்பு(20), தங்கதுரை(20) அன்பு செல்வம்(20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.