சென்னையில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இது சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கிறது. இதற்காக நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்கள் கையகப்படுத்தப்படும். இவை பல்வேறு நில பயன்பாடுகளுக்கு ஏற்ப வகை படுத்தப்படுவதோடு, நில உரிமையாளர்களுக்கும் பங்கீடு செய்து வழங்கப்படும்.

இதே நிலத்திரட்டு முறையின் கீழ் மாமல்லபுரம் அருகே துணை நகரமும் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் புறநகர் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் புதிய சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது. இதனால் சாலைகள் நான்கு வழி சாலைகளாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது. மேலும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து வளர்ச்சி குழு குடும்பத்தின் பல்வேறு அதிரடி திட்டங்களால் கூடிய விரைவில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ச்சியானது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.