புது நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு…. தீவிர பணியில் போலீசார்…..!!!!

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் புது நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை எனவும்  பிரதமர் திறப்பை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்து உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தக்கூடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் பேரணியின் முடிவில் நாடாளுமன்றம் முன் மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவுசெய்துள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அண்டை மாநிலங்களை சேர்ந்த பல கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப் போவதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக டெல்லியின் முக்கியமான எல்லை பகுதிகளில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அதோடு நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லி- அரியானா எல்லைப் பகுதியில் நுழைந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர்.