தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன். இவர் சாத்தூர் கரிசல்பட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 50 வருஷமா நீங்க எனக்கு மட்டும்தான் ஓட்டு போடுறீங்க. புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு கூட 6 மாதங்களில் சலிப்பு வந்துவிடும்.
ஆனால் நீங்க 50 வருஷமா என்னுடைய முகத்தை பார்த்து ஓட்டு போடுறீங்க. நான் உங்க எல்லோருக்கும் அண்ணன் மாதிரி. மேலும் உங்க பகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். அதோடு 50 வருஷமா எனக்கு மட்டுமே ஓட்டு போடுகிற உங்க காலில் விழுந்து எப்போதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறினார்.