புதிய ரூபாய் நோட்டில் எதாவது எழுதினால், அந்த பணம் செல்லாது என RBI அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது. இதையடுத்து இது குறித்து பத்திரிகை தகவல் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இது உண்மை கிடையாது. RBI எந்த ஒரு புதிய விதிமுறைகளை வெளியிடவில்லை. இருப்பினும் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால், அதன் ஆயுள் குறையும் என்பதால், எழுத வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எழுத்துகள் இருக்கும் ரூபாய் நோட்டுகளானது  செல்லும் எனவும் அவை தொடர்ந்து சட்டப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பதையும் PIB உறுதி செய்கிறது. இதற்கிடையில் அவை செல்லுபடியாகாது என கடைகளும், வங்கிகளும் அவற்றை வாங்க மறுக்க முடியாது என உறுதிப்படுத்தியுள்ளது.