தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என புதிய மாவட்டங்கள் அரசு உருவாக்க வேண்டும் என்பதுதான். இதன்படி பார்த்தால் திருச்சி, காஞ்சி,சென்னை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் , வேலூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களை பிரிக்க வேண்டிய நிலை ஏற்படும் . ஏற்கனவே 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் புதிய மாவட்டங்கள் உருவானால் 47 ஆக அது உயரக்கூடும்..