பொதுவாக காவல் நிலையத்திற்கு பல்வேறு விதமான புகார்கள் வரும். அந்த வகையில் தற்போது வந்த ஒரு புகார் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் வழக்கறிஞர் அஞ்சலி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ‌5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவரான நீரஜ சோப்ரா என்பவர் பிணையில் வெளியே வந்தார்.

இவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் தற்போது போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதாவது அஞ்சலியை கொலை செய்தால் 10 லட்ச ரூபாய் தருவதாக கோரி விட்டு தற்போது வரை ஒரு லட்ச ரூபாய் மட்டுமே தந்துள்ளதாக கூறினார். எனவே முழு பணத்தை சரியாக கொடுக்காது ஆக கூறி அவருடைய முன்னாள் கணவர், அவரின் தாய் மற்றும் தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.