சீனாவில் ஹாங்காங் பகுதியில் அபி சோய் என்ற மாடல் வசித்து வந்தார். இவர் ஒரு சர்வதேச மாடலாக இருந்தார். மேலும் இவர் பாரிஸில் நடந்த எலி ஸ்ப்ரிங் சம்மர் 2023 ஹார்ட் கோச்சர் ஷோ வில் பங்கேற்றத்திலிருந்து மிகவும் பிரபலமானார். கடந்த வாரம் எல்அபிசியல் மொனாக்கோ என்ற ஃபேஷன் இதழில் டிஜிட்டல் முகப்பு பக்கத்தில் அவரது படம் இடம்பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இவருக்கு ஒரு லட்சம் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். ஆனால் இவர் தனது கணவரை விட்டு பிரிந்தே இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாய்போ மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருந்து அவரது உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
அவரது இரண்டு கால்களும் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தலை, உடல் மற்றும் கைகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனை அடுத்து அபி கொலை செய்தது அவருடைய முன்னாள் கணவர் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அபியின் முன்னாள் கணவர் போலீசிலிருந்து தப்பி வேறொரு தீவிற்கு செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு அவருடைய முன்னாள் கணவரையும், சகோதரரையும், அபியின் மாமனார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கோடி ரூபாய் பணமும் ஆடம்பர வாட்சுகளும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு காரணம் சொத்து தகராறு தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.