தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராஜ்கிரண். ஒரு காலத்தில் படங்களில் ஹீரோவாக நடித்து வந்த ராஜ்கிரண் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் சிலர் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த நேரத்தில் ராஜ்கிரண் வீட்டில் இல்லாததாக சொல்லப் படுகிறது.‌ அப்போது ராஜ்கிரணின் மனைவி கதீஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவரை மிரட்டும் தோணியில் மர்ம நபர்கள் பேசி உள்ளதோடு அவர்கள் யார் என்று கேட்டதற்கு மாற்றி மாற்றி பதில் அளித்துள்ளனர்.

அதன் பிறகு வீட்டில் இருந்து கிளம்பும்போது நீங்கள் இந்து விரோதி மற்றும் முஸ்லீம் விரோதி என கோஷமிட்டு கொண்டே அங்கிருந்து மர்ம நபர்கள் சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.