கனமழையால் ராஜஸ்தான், குஜராத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பைபோர்ஜாய் புயலுக்கு பின் உருவான சூறாவளி காரணமாக ராஜஸ்தானில் 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இதன் பாதிப்பால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், தொடர் மழை பெய்துவரும் குஜராத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது எல்ஐசி. எல்ஐசி பாலிசிதாரர்கள் சிரமம் இல்லாமல் தங்களுடைய காப்பீட்டு தொகையை பெற இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எல் ஐ சி மற்றும் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா பாலிசிகளின் உரிமங்களை கோருபவர்கள் பயன் பெறலாம்.