விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரியமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் சீரியல் பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றம் உள்ளதால் மக்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது ரவீனா மற்றும் மணி நடந்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரவீணா மணியை கையைப் பிடித்து கடிக்கிறார். அதைப் பார்த்து ரசிகர்கள் இதெல்லாம் வேலை நிகழ்ச்சியில் இப்படியா செய்து கொண்டிருப்பது என கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.