விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி நாள் இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சுமார் 17 போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்களும் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரில் யார் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்படுவார்கள் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கான ஓட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்த நிலையில் இந்த சீசனில் சின்னத்திரை பிரபலத்தில் ஒருவர்,அரசியலில் ஒருவர் மற்றும் மாடலிங் துறையில் ஒருவர் என்று மூன்று துறைகளில் இருந்தும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் விக்கிரமனை பிக் பாஸ் அதிகமாக புகழ்ந்த காரணத்தினால் விக்ரமன் தான் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்.