பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வருமா? வராதா?….. எப்படி சரிபார்ப்பது?….. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் 13 வது தவணை ஜனவரி மாதம் இறுதிக்குள் வழங்கும் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் விவசாயிகள் இதற்காக தங்களுடைய வங்கி கணக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு மட்டுமே தொகை வந்து சேரும்.

பதிவு செய்த அனைவருக்கும் நிதியுதவி கிடைத்து விடாது. பி எம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி வராததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதாவது தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பயனாளிகளின் விவரங்கள் தவறாக இருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கக்கூடும். அதேசமயம் ஆதார் கார்டு இணைக்காமல் இருந்தாலும் நிதி உதவி கிடைக்காது. மேலும் மொபைல் நம்பர் சார்ந்த கேஒய்சி சரிபார்ப்பும் அவசியமாகும். இது போன்ற காரணங்களால் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வராமல் போகலாம். இப்படியான நிலையில் பயனாளியின் விவரங்கள் தவறாக இருந்தால் அல்லது ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் பி எம் கிசான் இணையதளத்தில் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.

அதற்கு பிஎம் கிசான் இணையதளத்தில் உள்ள farmers corner என்ற வசதியின் கீழ் விவசாயிகள் தங்களது விவரங்களை சரி பார்த்து அப்டேட் செய்து கொள்ள முடியும். அடுத்து பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் பணம் வருமா என்பதை தெரிந்து கொள்வதற்கு, முதலில் (https://www.pmkisan.gov.in/)  என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் farmer’s corner என்ற பகுதியை கிளிக் செய்து beneficiary status பகுதியை கிளிக் செய்து ஆதார் எண், வங்கி கணக்கு ஏன் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டும். அதன் பிறகு பெயர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை பார்க்கலாம். தகுதி உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைக்காவிட்டால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக புகார் அளிக்க விவசாயிகள் இந்த நம்பர்களை தொடர்பு கொள்ளலாம்.

பிஎம் கிசான் டோல் ஃபிரீ நம்பர்: 18001155266

பிஎம் கிசான் ஹெல்ப்லைன் நம்பர்: 155261

லேண்ட் லைன் நம்பர்கள்: 011—23381092, 23382401

பிஎம் கிசான் நியூ ஹெல்ப்லைன்: 011-24300606

ஹெல்ப்லைன்: 0120-6025109

Leave a Reply