பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் எனும் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அடுத்ததாக பார்த்திபன் “டீன்” எனும் பெயரில் 13 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட கதையில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு உள்ளார்.

அந்த திரைப்படத்திற்கு இசையமைக்க அவர் ஏ.ஆர்,ரகுமானை தொடர்புகொண்டபோது, தற்போது வேலைப்பளு அதிகமாக உள்ளதால் தற்போதைக்கு உங்கள் படத்துக்கு இசையமைக்க முடியாது என தெரிவித்தார். அதே நேரம் பார்த்திபன் இயக்கும் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்,ரகுமான்.