விலங்குகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்பதை இந்த ஒரு வீடியோ எடுத்துக்காட்டுகிறது. ஒரு பாம்பு அணிலைச் சுற்றிக் கொண்டு அதைக் கொல்ல முயல்கிறது. எவ்வளவு முயன்றும் அணில் பாம்பின் பிடியில் இருந்து மீள முடியாமல் நெளிந்து கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் மற்றொரு அணில் வந்து பாம்புடன் சண்டையிட்டு அந்த அணிலை காப்பாற்றுகிறது. ஆபத்தில் இருக்கும் தனது துணையை பாம்பிடம் இருந்து அணில் காப்பாற்றிய இந்த வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ளது.