சீனாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்குள்ள ஒரு மிகப்பெரிய பாம்புப் பண்ணையிலிருந்து (Snake Farm) 900-க்கும் மேற்பட்ட கொடிய நச்சுப் பாம்புகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளன. இதனால் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் விஷப் பாம்புகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றுவதைக் கண்டு ஒட்டுமொத்தப் பகுதி மக்களும் அஞ்சி நடுங்கி, வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

​இந்தக் கொடூர நச்சுப் பாம்புகள் கடித்ததில், தற்போது வரை ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாம்புக் கடிக்குள்ளான பலர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வரும் நிலையில், அவர்கள் அனைவரும் அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடிய பாம்புகளைப் பிடிக்க மீட்புக்குழுவினர் அதிரடியாகக் களமிறங்கியுள்ளதால் அந்த மாகாணமே பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.