அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றில் 6 வயது சிறுமியும் அவரது பாட்டியும் சென்றுள்ளனர். அந்த காரை பாட்டி ஓட்டிச் செல்ல சிறுமி பாட்டிக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனை அடுத்து பாட்டியின் இருக்கைக்கு பின்னால் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது துப்பாக்கியை எடுத்து சிறுமி விளையாட்டாக சுட்டுள்ளார். இதில் குண்டு இருக்கையை துளைத்துக் கொண்டு பாட்டியின் கீழ் முதுகிற்குள் நுழைந்தது. இதில் படுகாயம் அடைந்த பாட்டி உடனடியாக காரை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார்.

அதன் பின் அவர் அங்கிருந்து அவசர என்னை அழைத்து விவரங்களை கூறியுள்ளார். இதனை அடுத்து பாட்டி வான்வழியே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது “துப்பாக்கியை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இந்த சம்பவம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இது பாட்டிக்கு மட்டுமின்றி குழந்தைக்கும் மிகப்பெரிய ஊறு விளைவித்திருக்கும். விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் தற்செயலாக நடந்தது என்பது தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.