உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க கோரி உக்ரைன் அதிபர் ஜெர்மன் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவை பெற்றார். இந்த நிலையில் கீழ் பகுதியில் உள்ள மெல்னைட்ஸ்கி நகரில் இன்று காலை 2 இடத்தில் குண்டுகள் வெடித்தது. இதனால் மின்சாரக்கட்டமைப்பில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக மின் இணைப்பு சப்ளையை உக்ரைன் அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.

இதுபோன்று பாத்முத் நகரில் போர் தீவிரமடைந்து வரும்போது மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க முயல்கின்றன என்ற குற்றச்சாட்டை ரஷ்யா முன் வைத்தது. அதோடு சில நாட்களுக்கு முன் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டும் வெளிவந்தது. இதுகுறித்து அமெரிக்கா கூறியதாவது “ரஷ்யாவின் கூலிப்படை நிறுவனமான வாக்னர் குழுவைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் இந்த போரில் மரணித்துள்ளனர். குறிப்பாக டிசம்பர் மாதம் நடந்த போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களில் 90% பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான்” என கூறியுள்ளது.