பழனி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை…. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா….? முழு விவரம் இதோ…!!

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக திருவிழா நடைபெறும் நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் மதுரை- பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல்- கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை 5 நாட்களுக்கு இயக்கப்படும். அதன்படி மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பகல் 12:30 மணிக்கு பழனியை வந்தடையும்.

அதன்பின் பழனியில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5 மணி அளவில் மதுரையை சென்றடைகிறது. இதேபோன்று கோவையில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்படும் ரயில் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியாக காலை 11:38 மணிக்கு பழனியை வந்தடைகிறது. அதன் பிறகு பழனியில் இருந்து காலை 11:43 மணிக்கு புறப்படும் ரயில் ஒட்டன்சத்திரம் வழியாக மதியம் 1 மணிக்கு திண்டுக்கல்லை வந்து அடைகிறது. மேலும் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2:55 மணிக்கு பழனியை வந்தடையும். பழனியில் இருந்து 3 மணி அளவில் புறப்படும் ரயில் உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5:30 மணிக்கு கோவையை சென்றடைகிறது.