தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களுடைய பிறந்தநாளில் மதிய உணவோடு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

அதன்படி சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் இதற்காக 4.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 43, 131 சத்துணவு மையங்களில் வழங்குவது குறித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.