பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு சென்று பார்த்த போது அவர்களை உள்ளே விடாமல் மழுப்பலாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் பள்ளிக்குள் சென்று பார்த்தபோது கழிவறையில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் சிசிடிவி கேமராவை கைப்பற்றி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதோடு பள்ளிக்கு  தீ வைத்தனர்‌. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவனை கொகொன்று  பள்ளி கழிவறையில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.