இன்று (ஜூன் 14) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை வெப்பத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு மாற்றமின்றி நாளை திறக்கப்படுகிறது. ஏற்கனவே 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரி பள்ளிகளில் நாளொன்றுக்கு 3 முறை ‘வாட்டர் பெல்’ அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி காலை 10.30, 11.45 மற்றும் பிற்பகல் 2.30க்கு பெல் அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு போதிய வசதி ஏற்படுத்தித்தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது