டெல்லியில் ஜவுளி ஆலோசனை குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பருத்தி மதிப்பு சங்கலியை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு பருத்தி மூட்டைகளுக்கு சான்றிதழ் பெற தர கட்டுப்பாட்டு ஆணையை கட்டாயமாக்குவதற்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தின் போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஜவுளி தொழிற்சாலைகளில் சிறந்த தரம் வாய்ந்த நூல்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அதன்பிறகு இந்திய பருத்தி இழையின் தரத்தால் விவசாயிகள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் பலனடையும் என்று கூறினார். மேலும் இந்திய பருத்திக்கு முத்திரை வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த பருத்தியின் மதிப்பு சங்கிலிக்கு கூட்டு மதிப்பு அளிக்க முடியும் என்றும், விவசாயிகள் முதல் நுகர்வோர்கள் வரை தனி அடையாளத்தை அதன் மூலம் வழங்க முடியும் என்றும் கூறினார்.