இந்தியாவில் மூத்த குடிமக்கள் நிலையான வருமான பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசால் தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கணவன்-மனைவி ஒருவருக்கு ஒரு கணக்கு அல்லது கூட்டு கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் 1.5 லட்சம் வரையில் வருமான வரிச் சலுகையும் கிடைக்கும். இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ப மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச முதலீடு தொகையை உயர்த்தி அறிவித்தார். இதனால் முதலீட்டு தொகை  15 லட்சத்திலிருந்து  30 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்த 30 லட்சம் முதலீடு தொகைக்கு 5 வருட முதிர்வு காலத்தில் 12 லட்சம் வட்டியுடன் சேர்த்து 42 லட்ச ரூபாய் கிடைக்கும். இது ஒரு வருடத்திற்கு 2.4 லட்சம் என்ற அடிப்படையில், மாதந்தோறும் மூத்த குடிமக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.  இதற்கு ‌ முன்பாக மூத்த குடிமக்கள் திட்டத்தில் 9,500 ரூபாய் மாத வருமானமாக கிடைத்த நிலையில் தற்போது 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது மூத்த குடிமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து மூத்த குடிமக்கள் திட்டத்தில் கூட்டு கணக்கை தொடங்கினால் மாதம் 40 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்.