நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் இந்த எம்பி தேர்தலில் 300க்கும் குறைவான இடங்களில் போட்டியிட உள்ளது.

இதுவரை 27 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 278 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இன்னும் 20க்கும் குறைவான இடங்களை அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 298 இடங்களில் அக்கட்சிப்போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு – 421, 2014 ஆம் ஆண்டு 464 இடங்கள், 2009 ஆம் ஆண்டு 440 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.