பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் கட்டணம்: பிப்., 15 முதல் அமல்…. வெளியான அறிவிப்பு…!!

சர்வதேச விமான பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால், அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதி திருப்பி அளிக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 1500 கிலோமீட்டர் குறைவான தொலைவு விமான பயண டிக்கெட் 30 சதவிகிதமும், 1500 முதல் 3500 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணடிக்கெட் 50 சதவீதமும், 3500 கிலோமீட்டருக்கு 75% பயண கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

பயணிகளுக்கு தெரியாமல் பயண வகுப்பு மாற்றம் செய்யப்பட்டால் வரிகள் உட்பட அனைத்து பயண கட்டணத்தை முழுமையாக திருப்பி அளிப்பதோடு அடுத்த வகுப்பில் பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் முன்பு டிஜிசிஏ தெரிவித்து இருந்தது. இந்த நடைமுறை பிப்.,15 முதல் அமலுக்கு வருகிறது.