இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வர வேண்டும் என்பதே பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விருப்பமாக இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருவதோடு பல்வேறு விதமான கோரிக்கைகளையும் அரசுக்கு விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அரசு பணியில் ஈடுபடும் சிலர் சிறப்பு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது நாடு முழுவதும் அனைத்து மக்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற விரும்பும் நிலையில் சில குறிப்பிட்ட நபர்களுக்காக இந்த திட்டத்தை மீட்டெடுப்பதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய துணை ராணுவ படைகள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை பெறுவார்கள். இது ஆயுதப்படை என்பதால் அவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்றும் பழைய ஓய்வு புதிய திட்டம் துணை ராணுவ படையினருக்கு கிடைக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பால் முன்னாள் ராணுவ வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்ட நிலையில் நிதி பிரச்சனையை காரணம் காட்டி இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.