ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கொல்கத்தா அணி மிகவும் அபாரமாக பந்து வீசியது. என்னுடைய பழைய நண்பர் ஸ்டாரக் எங்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.

நாங்கள் போதுமான அளவுக்கு போட்டியில் செயல்படவில்லை. எங்களால் அவர்களுடைய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அவர்கள் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. இருப்பினும் எங்களுடைய வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடினார்கள். எங்கள் அணி வீரர்கள் எந்த அளவுக்கு தைரியமாக இருந்தார்கள் என்பதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மேலும் இந்த அணியுடன் இருந்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.