ஐபிஎல் தொடரின் ஃபேர்பிளே விருதை கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட சிஎஸ்கே அணி வாங்க முடியாமல் தவித்து வருகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை ஆறுமுறை சிஎஸ்கே அணி ஃபேர்பிளே விருதை கைப்பற்றியுள்ளது. ஆனால் அதன் பிறகு வெல்ல முடியாமல் திணறி வருகின்றது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த போது தோனி, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை ஜெயிக்கிறோமோ இல்லையோ, ஃபேர்பிளே விருதை நிச்சயம் வெல்ல வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.