தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்த படம் வங்கியில் நடக்கும் ஊழல்கள் மற்றும் திருட்டு போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.‌

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் சாம் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியின் போது நடிகர் ஷாம் நடிகர் அஜித் தனக்கு ஒரு பரிசு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதாவது தன்னுடைய முதல் படமான 12பி படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித் தன்னை பாராட்டியதாக ஷாம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் என்னுடைய திருமணத்திற்கு நடிகர் அஜித்தை அழைப்பதற்காக ஏவிஎம் சென்றேன். அதன்பின் என்னுடைய திருமணத்திற்கு நடிகர் அஜித் ஷாலினி அவர்களுடன் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு பரிசாக கொடுத்த மொபைல் போனை தற்போது வரை பத்திரமாக வைத்திருப்பதாக ஷாம் கூறினார்.