தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். இந்நிலையில் பழனி திருக்கோவிலில் சுமார் 16 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த குடமுழுக்கு திருவிழா ஜனவரி 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த குடமுழுக்கு திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள கட்டணமில்லா ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். மேலும் இவர்களில் 2000 பேருக்கு குலுக்கள் முறையில் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.