மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா அரசு மருத்துவமனையில் எலிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதுகுறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த மருத்துவமனையின் பொது வார்டில் எலிகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த வீடியோவை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் அரசு மருத்துவமனையின் நிலையை பாருங்கள் மருத்துவமனையில் நோயாளிகளை விட எலிகளை அதிகமாக இருக்கிறது. நோயாளிகள் மற்றும் குழந்தைகளை எலிகளிடம் இருந்து பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.