60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக மற்றும் திரிபுரா உள்ளூர் மக்கள் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இதே போன்று முந்தைய ஆளுங்கட்சியான சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தன. இந்நிலையில் திரிபுராவில் 89.95% வாக்குகள் பதிவாகி இருந்தன. மெஜாரிட்டிக்கு 31 இடங்கள் தேவை.

இந்த நிலையில் பதிவாகிய வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு  எண்ணப்பட்டு, முடிவுகள்  அறிவிக்கப்பட இருக்கின்றன. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்று வந்தது. எனவே திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 40 இடங்களுக்கு மேல் முன்னிலையில் இருந்த பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது பாஜக 26, கம்யூ., 22, திப்ரா 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. இதேநிலை நீடிக்குமா? அல்லது அடுத்த சுற்றில் முன்னிலை நிலவரத்தில் மாற்றம் வருமா? என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.