திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அருகே உள்ள மேலராமன் சேத்தி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ  நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் நெல்லின் தரம் குறித்தும், சரியான எடை இருக்கிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளிடம் அவர் பேசியபோது, தங்களுடைய நெல்லை இந்த பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யுமாறு கூறியுள்ளார்.

மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு பணம் கேட்டாலோ?  அல்லது ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ? உடனடியாக  தகவல் தெரிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து தகவல் கிடைத்தவுடன் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.