அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் நிலத்தில் மாரிமுத்து அவருக்கு சொந்தமான ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கீதா “ஆடு, மாடுகளை இங்கிருந்து ஓட்டி செல்” என கூறியுள்ளார்.
ஆனாலும் தொடர்ந்து மாரிமுத்து அங்கேயே ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சங்கீதா வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மாரிமுத்து, அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் சங்கீதா வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சங்கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாரிமுத்து மற்றும் மாரியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.