தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ எடுத்து சுழற்சியை நிலவிவரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஆகஸ்ட் 16 நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.