
திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி, மதவெறித் திட்டத்தை பாஜக, சங்பரிவார அமைப்புகள் அரங்கேற்றியுள்ளன. சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்தி அன்னதானம் செய்வது வழக்கம்.
இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்க்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர். மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்போம் என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.