அமைச்சர் துரைமுருகன் பெரியார் பற்றிய தவறாக பேசுபவர்களின் பிறப்பை சந்தேகப்படுவதாக கூறினார். இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எங்களுடைய பிறப்பு நல்ல பிறப்பு தான். பெரியார் சில மனிதர்களைப் பற்றி பேசி உள்ள நிலையில் கடந்த 1962 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிக்கையில் வெளியான அந்த செய்தியை படிக்க வேண்டும் என்றார். அதன்பிறகு நான் பெரியாரைப் பற்றி தான் பேசுகிறேன். நான் ஒரு அம்மா அப்பாவுக்கு பிறந்தவன் தான். நான் கிராமத்தில் தான் பிறந்தேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதுவரை நான் எந்த ஊழலும் செய்யவில்லை என்பதிலும் சந்தேகம் கிடையாது. என் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் கடப்பாரையை கொண்டு வந்து சோதனை செய்யவில்லை. நீங்க ரைடுக்கு வரும்போது துபாயில் போய் இருக்கிற மாதிரி ஒரு பையனையும் நான் பெற்றெடுக்கவில்லை. அமைச்சர் துரைமுருகன் சொன்னது போன்று நான் பக்கம் 21க்கு பிறக்கவில்லை. ஒரு அம்மா அப்பாவுக்கு தான் பிறந்துள்ளேன். பெரியார் பற்றி பேசுபவர்கள் பிறப்பை சந்தேகப்பட்டால் நான் சொல்வதை போட்டு பார்க்கட்டும். மேலும் எங்கள் பிறப்பு நல்ல பிறப்பு தான் என்று கூறியுள்ளார்.