சென்னை வில்லிவாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் எப்படி கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாம் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். நான் தற்போது உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் நான் சொல்லுவேன்.

நான் எல்லோருக்கும் பொதுவானவன். எப்போதும் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருக்க கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார். மேலும் கிறிஸ்தவர்கள் பண்டிகை மற்றும் இஸ்லாமியர்களின் பண்டிகைக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்வதாகவும் இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லவில்லை எனவும் பாஜகவினர் குற்றம் சாட்டி வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இப்படி ஒரு கருத்தை சொன்னது குறிப்பிடத்தக்கதாகும்.