தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் பீஸ்ட், சாணிகாயிதம் மற்றும் பகாசூரன் போன்ற படங்களின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடிப்பில் பகாசூரன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில், அவருடைய தந்தை செருப்பால் அடித்தது குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, நான் என்னுடைய தந்தை கஸ்தூரிராஜாவிடம் சென்று படித்தது போதும். இனி சினிமாவுக்குள் சென்று படத்தை இயக்கப் போகிறேன் என்று கூறினேன். அப்போது அவர் யோசிக்காமல் என்னை செருப்பால் அடித்து விட்டார் என்று கூறினார். மேலும் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.