நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாவே இருந்தது. இதேபோன்று வடமாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா கூறியதாவது, கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27ஆம் தேதி வரை மொத்தம் 374 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது மாநில அரசு அளித்த தகவலின் படி கணக்கிடப்பட்டது. அதோடு 67 ஆயிரம் பேர் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்ப காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது என்று கூறினார்.