இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவை அறிமுகமானது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது பரவலாகவுள்ள 4ஜி சேவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் நாட்டில் உள்ள 93% கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் 45,000 கிராமங்களுக்கு இதுவரை 4ஜி சேவை வழங்கப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.