நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். தொடங்கி வைக்கப்பட்ட அன்றைய தினமே முதல்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

இந்நிலையில் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு இன்று காலை 10.30 மணிக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி, வீடியோ கான்பரன்சிங் மூலம் பணி நியமனம் பெறுபவர்களிடம் உரையாற்ற உள்ளார்.