நவோதயா வித்யாலயா 2023-24 கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை இந்த மாதம் 29ஆம் தேதி நடத்துகின்றது. இந்தத் தேர்வுக்கான அனுமதி அட்டைகளை நவோதயா வித்யாலயா சமிதி தற்போது வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஹால் டிக்கெட்டுகளை https://cbseitms.rcil.gov.in/nvs/AdminCard/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி @ cbseitms.nic.in நடத்தப்பட உள்ளது. பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.