நீங்கள் ரயில்களில் பல முறை பயணம் மேற்கொண்டு இருப்பீர்கள். இப்பயணத்தின் போது ரயில் பாதையில் கற்கள் சிதறி கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதனிடையே இந்த கற்களுக்கும் ரயிலின் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, ரயில் தண்டவாளத்தில் அதி வேகமாக ஓடும்போது அதிக சத்தம் மற்றும் அதிர்வு ஏற்படுகிறது.

இந்த அதிர்வு இரைச்சலைக் குறைக்க பாதையில் கற்கள் சிதறிக் கிடக்கிறது. மேலும் இந்த கற்கள் சத்தம் மற்றும் அதிர்வுகளை உறிஞ்சுவதால் ரயிலில் அமர்ந்திருப்பவர்களும், வெளியில் நிற்பவர்களும் அதிக சத்தத்திலிருந்து தப்பிக்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் நீண்டநேரம் நிற்கும் போது, அதில் அமர்ந்திருப்பவர்கள் கழிவறையை பயன்படுத்துவதால் கீழே உள்ள தண்டவாளத்தில் அழுக்கு விழுந்துக்கொண்டே இருக்கிறது.

அதுபோன்ற நிலையில் தண்டவாளத்தில் விழும் கற்கள் அந்த அழுக்கை உறிஞ்சி விடும். அந்த கற்கள் தண்டவாளத்தில் இல்லையெனில் அசிங்கம் குவியலாக குவிந்து ஒரு நிமிடம் கூட மக்கள் நிற்கமுடியாத அளவுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த கற்களானது தண்டவாளத்தின் மண் மூழ்காமல் தடுப்பதோடு தண்டவாளத்தில் புதர்கள் வளராமல் தடுக்கிறது.