சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. அதன்பிறகு நீல வழித்தடத்தில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான பகுதிகளுக்கு இடையில் நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இது அண்ணா சாலையின் கீழ் அமைந்துள்ள நிலையில் இருபுறங்களில் இருந்தும் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழையலாம். ஒருபுறம் தேவர் சிலை நுழைவு வாயில் மற்றொருபுறம் வெங்கட்நாராயண சாலை நுழைவுவாயில் என 2 பாதைகள் இருக்கிறது. இதில் வெங்கட் நாராயணா சாலை நுழைவு வாயிலில் ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் பரிசோதனை செய்யும் மிஷின் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒருவர் பயணிகளை பரிசோதனை செய்வதோடு அனைவரின் பையையும் திறந்து பார்க்கிறார்.
இதனால் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதோடு தாமதமும் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் பரிசோதனை செய்யும் மெஷினை உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பயணிகள் செல்வதற்கு முன்பாக ஒருவர் ஸ்கேன் செய்யும் மிஷினை வைத்து பயணிகளை ஸ்கேன் செய்யும் போது ஆட்டோமேட்டிக் பரிசோதனை செய்யும் மிஷினில் பயணிகளின் பைகள் பரிசோதனை செய்யப்பட்டு விடும். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.