நடிகர் ஷாருக்கானின் பதான் படத்தால் துணிவு, வாரிசு வசூல் பாதிக்குமா….? அசர வைக்கும் பிரம்மாண்ட கட் அவுட்டுகள்….!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக ஜீரோ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது 4 வருடங்களுக்கு பிறகு பதான் திரைப்படம் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்று பதான்  திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகிறது. அதன் பிறகு பதான் திரைப்படம் உலகம் முழுவதும் முன்பதிவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. இதனால் பதான் திரைப்படம் பல கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பதான் திரைப்படத்திற்கு சென்னையில் உள்ள தியேட்டர்களில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதோடு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் தற்போது தமிழ்நாட்டில் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பதான்  திரைப்படம் நன்றாக இருந்தால் தியேட்டர்களில் அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுவதால் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதேபோன்று தெலுங்கு சினிமாவில் வெளியான வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்கா ரெட்டி போன்ற திரைப்படங்களின் வசூலும் பதான் படத்தில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply