பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வென்றார். பிக் பாஸ் டைட்டிலை விக்ரமன் தான் ஜெயிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அசீம் டைட்டிலை வென்றார். அசீம் வெற்றி பெற்றது தவறான விஷயம் என்று பிக் பாஸ் குழு மற்றும் கமல்ஹாசன் மீது பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். இதேபோன்று அசீம் ஜெயித்தது பிக் பாஸ் சக போட்டியாளர்கள் சிலருக்கும் பிடிக்கவில்லை.

ஆனால் யாரும் அசீம் ஜெயித்தது குறித்து விமர்சிக்காமல் இருந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த மகேஸ்வரி அசீம் ஜெயித்தது தொடர்பாக ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அதில் அசீம் ஜெயித்தது தவறான முன் உதாரணம் என்று எழுதப்பட்ட ஒரு பத்திரிகையின் தலைப்பை காண்பித்துள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.