தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். இவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போதே தொடங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த அனுமதி கொடுக்கப்படாத நிலையில் தற்போது பொன்மலை ஜி கார்னரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த கொடியை பயன்படுத்துவது என்பது குறித்து விஜய் தான் முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது. கோட் படம் வெளியாகும் வரை கட்சி தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது எனவும் செப்டம்பர் 5ஆம் தேதிக்கு பிறகு கொடி மற்றும் மாநாடு தேதி என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் தெரிகிறது.